வணிகப் பெயர்கள் தொடர்பான 1918 ஆம் ஆண்டின் வணிகப் பெயர்கள் கட்டளை எண். 6 (CAP. 149) இன் படி, மத்திய மாகாணத்தில் ஒரு வணிகத்திற்கான, வணிகப் பெயரைப் பதிவு செய்வது கட்டாயமாகும். அதன்படி, 2007 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டம் எண். 7 இன் கீழ் உள்ளடக்கப்படாத அனைத்து வணிகங்களின் வணிகப் பெயர்களும் இந்த கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும். வர்த்தகம், வியாபாரம் மற்றும் சுற்றுலாத் திணைக்களம், மத்திய மாகாணத்தில் வணிகப் பெயர்கள் பதிவை நிர்வகிப்பதற்கான பொறுப்பான அரசாங்க அமைப்பாகும். வணிக பெயர்கள் பதிவாளராக நிறுவனத்தின் பணிப்பாளர் செயற்படுகிறார்.

வணிக சமூகத்திற்கு மிகவும் பயனுள்ள மற்றும் விரைவான சேவையை வழங்குவதை  முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்குவதோடு பதிவிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் இந்நிறுவனத்தினாலும்,  புதிய வியாபார பெயர் பதிவுகளை குறிப்பிட்ட வியாபாரம் அமைந்திருக்கும் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் 1992ம் ஆண்டு முதல் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது .  இதன்படி, மத்திய மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக சமூகம், வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னரும், வணிகப்பெயர் பதிவுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

வணிகப் பெயர் பதிவுச் சான்றிதழைப் பெறுவதன் நன்மைகள்

  • வணிகப் பெயரைப் பதிவு செய்வதன் மூலம் வணிகத்திற்கு முறைப்படி சட்டப்பூர்வத்தன்மை மற்றும் அடையாளத்தை வழங்குதல்.
  • வணிகத்தின் நற்பெயர் அதிகரிக்கும்.
  • வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது எளிது.
  • வணிக இருப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறுவதில் பல்வேறு சலுகைகள்.
  • வாடிக்கையாளர்களிடையே வணிகத்தின் உயர் அங்கீகாரத்தைப் பெறுதல்.
  • பிற நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளில் நம்பிக்கையின் காரணமாக பரிவர்த்தனைகளை எளிதாக்குதல்.
  • வணிகத்தின் இருப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல்.
  • தனிப்பட்ட சொத்தாகக் காட்ட முடியும்.

 

வணிகப் பெயர்கள் பதிவுச் சான்றிதழ்கள் இரண்டு வகைகளின் கீழ் வழங்கப்படுகின்றன

  1. ஒரு தனிநபரின் பதிவுச் சான்றிதழ் (தனி உரிமையாளர்).
  2. ஒரு நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் (2-20 பங்குதாரர்கள்).

1992ம் வருடத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வியாபார பதிவுச் சான்றிதழ்களுக்கான திருத்தங்கள் மற்றும் ரத்துச்செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள  வணிக,வியாபார, மற்றும் சுற்றுலாத்துறை திணைக்களத்திற்கு வருகை தந்து விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வது மூலம் மேற்கொள்ள முடியும்.

 

முதன்மையாக வணிகத்தின் பெயர் பதிவு சான்றிதழைப் பெறும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. கோரிக்கைகள் கடிதம் (பங்குதாரர்கள் இருந்தால், அனைத்து பங்குதாரர்களும் கையெழுத்திட வேண்டும்).
  2. கிராம அதிகாரி அறிக்கை (வணிகம் அமைந்துள்ள கிராம அதிகாரியால் வழங்கப்பட வேண்டும்). இப்பதிவு பிரதேச செயலாளரினால்  உறுதிப்படுத்தல்  வேண்டும்.
  3. வணிகம் அமைந்துள்ள பிரதேச சபை அல்லது மாநகர சபையால் பெறப்பட்ட வர்த்தக உரிமம்.
  4. வர்த்தக உரிமம் வழங்கப்படாத வணிகங்களுக்கு பிரதேச சபை அல்லது மாநகர சபையால் வழங்கப்பட்ட பணம் செலுத்திய ரசீது.
  5. தேசிய அடையாள அட்டைகளின் சான்றிழல் படுத்தப்பட்ட பிரதிகள் (அனைத்து பங்குதாரர்களினதும்)
  6. வணிக பதிவுச்சான்றிதல் விண்ணப்பதாரர் வேறொரு பிரதேச செயலகத்தில் வசிப்பவராக இருந்தால்,     கிராம அதிகாரியிடமிருந்து பெறப்படும் வசிப்பிடச் சான்றிதழ்.
  7. வியாபாரம் அமைந்துள்ள இடத்தின் தகவல்( காணி உறுதி மற்றும் உரிமையாளர் பதிவு)
  8. வியாபாரத்தின் அவசியத் தன்மை தொடர்பாக பரிந்துரை/ அங்கீகாரம் அல்லது பொலிஸ் அறிக்கை.
  9. வியாபார ஸ்தானத்தின் புகைப்படம் மற்றும் பெயர்ப்பலகையின் புகைப்படம் (A4 அளவிற்கான)
  10. மேலும் பிரதேச செயலாளரினால் வேண்டப்படும் அனைத்து விதமான ஆவணங்கள்.