இலங்கையின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்ததாகக் கருதப்படும் அங்கப்போர்க் கலை, 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. அது பல தலைமுறைகளாக வளர்ச்சியடைந்து, காலத்தின் மாற்றங்களைத் தாங்கி, ஒரு கட்டத்தில் இலங்கை வாழ்க்கை முறையின் இன்றியமையாத ஓர் அங்கமாக மாறியது. பல ஆண்டுகளாக, நாடு மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையை அனுபவித்தது, இது நாட்டின் ஆட்சியாளர்களை தமது குடிமக்களின் உதவியுடன் பாதுகாப்பை ஒழுங்கமைத்து, வெளிப்புறப் படையெடுப்புக்களையும், உள்நாட்டுக் கலகங்களையும் எதிர்த்துப் போராடக் கட்டாயப்படுத்தியது. மன்னராட்சியானது முழுநேரப் பணியாற்றும் வீரர்களைக் கொண்ட ஒரு சிறந்த இராணுவத்தைக் கட்டமைத்தது, மேலும், நாட்டு மக்களில் பெரும்பாலானோர் அரசன் மற்றும் நாட்டின் பெயரால் போரில் பங்குபெறத் தயாராகவே இருந்தனர். எனவே அங்கப்போர்க் கலைப் பயிற்றுநர்கள் நாடு முழுவதும் பரவி இருந்தனர், இவர்களின் கீழ் விவசாயம், மட்பாண்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட பொதுமக்கள், தேவைப்படும் நேரத்தில் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் அளவுக்கு உடல், உள ரீதியான ஒழுக்கத்திற்கான தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றனர்.
இலங்கையை கடுமையான சட்டதிட்டங்களுடன் ஆண்ட பிரித்தானிய ஆட்சி, அங்கப்போர் முறையைத் தடைசெய்ததோடு சட்டவிரோதமாக்கியது. அதன் காலனித்துவ காலத்தில் இக்கலையை அறிந்த எந்தவொரு பயிற்சியாளரையும் சிறைபிடித்தல், துன்புறுத்தல், முழங்காலில் சுடும் உத்தரவு உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரித்தானியர்களின் இந்த கொடுமையான சகாப்தம் இலங்கை பூர்வீகக் குடிகளின் தற்காப்பு உணர்வைத் தூண்டியது. இதன் காரணமாக, குறிப்பிட்ட சிலரால் அங்கப்போர்க்கலை இரகசியமாகப் பயிலப்பட்டது. பெரும்பாலான குருமார் (பயிற்றுநர்கள்) இக்கலையை கற்பிப்பதைத் தவிர்த்தனர், ஆனால் கலையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சில போர்வீரர் குடும்பங்கள், இன்றுவரை அதைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகின்றன. அங்கப்போர் முறையின் பரந்த வரலாறும், பரிணாம வளர்ச்சியில் அதன் இருப்பும், வரலாற்றில் தெளிவாகப் பதியப்படாததோடு, கூறுபட்டும் காணப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான கட்டுரையாகப் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அங்கப்போரின் நுட்பமான அம்சங்கள் இலங்கையின் அங்கப்போர்க்கலை வீரர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கப்போர்க்கலை பற்றிய நீண்ட வரலாறும் அதன் இன்று வரையான வளர்ச்சியும், முறையான ஆய்வுக் கட்டுரையில் ஒருபோதும் ஆவணப்படுத்தப்படாததால், நிச்சயமற்ற மற்றும் கூறுபட்ட கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், இலங்கை அங்கப் போர்வீரர் குலங்கள் அங்கத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பதிவு செய்திருப்பது அதிர்ஷ்வசமானது. எம்மிடம் எஞ்சியிருப்பதெல்லாம் வரலாற்று நிகழ்வுகளின் முரண்பட்ட கூறுகள் மட்டுமே, அவை பதிவுகளில் கணப்பொழுதே தோன்றி, வெற்றிடங்களைக் கொண்டுள்ளதோடு, பல கேள்விகளைத் தீர்க்காமலும் விட்டுவிட்டன.
அங்கப்போர்க் கலை, இலங்கையின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்ததாகக் கருதப்படுவதோடு, 5000 ஆண்டுகளுக்கும் முந்தையது. இது முன்னர் இலங்கை வாழ்க்கை முறையின் இன்றியமையாத அங்கமாக இருந்ததோடு, காலத்தின் சோதனையைத் தாங்கித் தலைமுறை தலைமுறையாக வளர்ந்தது. அங்கம் பற்றிய மிகப் பழமையான சான்றுகள், சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் அரசன் இராவணனின் பரந்த ஞானத்தின் மூலம் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. கி.மு 161 இல் இலங்கையை ஆண்ட துட்டகைமுனு மன்னனின் ஆவணங்களில் இக்கலையின் நவீன உதாரணத்தைக் காணலாம். துட்டகைமுனு மன்னனுக்கு சேவை செய்ததாக கருதப்படும் பத்துப் போர்வீரர்கள், தங்கள் ஆட்சியாளருடன் இணைந்து அச்சமற்ற வீரதீர சாகசங்களில் ஈடுபட்டமை பற்றிய அற்புதமான கதைகள் எழுதப்பட்டுள்ளன.